காதலி Wanted
Posted by premkalvettu as Uncategorized
அவசர அவசரமாகஎனக்கொருகாதலி தேவைப்படுகிறது.பாதியாய் மறைக்கப்பட்டமார்பகங்களும்பாதிக்கும் குறைவாய்மறைக்கப்பட்ட உடல்களும்கலவரப்படுத்திப் போகிறதுஎன் ஹார்மோன்களைசில முத்தங்களும்சில சத்தங்களும்தனித்திருப்பதற்கானதண்டனையாய் படுகிறதுonline’ல் பார்க்கும் ஒவ்வொருநொடியும் பேசத்துடிக்கிறதுமனதுபேசாமல் விட்ட விசயங்களும்பேசுவதற்காய் சேர்த்து வைத்தவைகளும்அழுத்திப்போகிறது மனதைமீறிபேசியவைகள் எல்லாம்சச்சரவுகளில் முடிந்ததுபேசாதவைகள் எல்லாம்கற்பனைகள் என ஒளிந்துகொண்டதுஅவ்வப்போது எழுதியாகிவிட்டதுஉனக்கான காதலையும்எனக்கான வலிகளையும்போதும் வாகிளம்பி வாவந்து தணித்துப் போ எல்லாவற்றையும்என் காதலியாய்பின்குறிப்பு:தேர்வுகள் இருப்பதால் june23′க்கு அப்புறம் கிளம்பி வரவும்- பிரேம்
Popularity: 4%
Popularity: 4%
மொக்கை
Posted by premkalvettu as Uncategorized
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருக்கிறேன் அவனை…வெகு நாட்களாகஎழுதவில்லை..காயப்படவில்லை…கண்ணீர் சுரப்பைகள் கூட வற்றிவிட்டதாகவேஉணர்கிறேன்..கடைசியாய் அனுமதிக்கப்படுமுன் அவன் முனங்கியவைகளில் சிலவற்றை பதிவு செய்திருக்கிறேன்.ஞானசேகர் மொழியில் சொல்வதென்றால் “மொக்கை” என்றாலும் வேறு வழியில்லாமல் பதிவு செய்கிறேன்.இதுவே அவனுடைய கடைசியாய் இல்லாமல் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.மீண்டுவிடுவான் என்ற நம்பிக்கையில்….. **************************யார் யாருக்கெல்லாமோஉனை பிடித்திருப்பதாய்சொல்லிக் கொண்டிருக்கிறாய்உனக்கு பிடித்திருக்கிறதாஎனக் கேட்பதாகவே படுகிறது எனக்கு.****************************இன்னும் எத்தனை வருடங்கள் தான்பார்க்காமல் இருப்பதுஒருமுறைதான் வந்துபார்த்துவிட்டு போயேன்பத்திரமாய் இருக்கிறதாஉன் நினைவுகள் என்று.***************************************************பைக்கில்கொஞ்சம் நெருங்கி தான்உட்காரேன்பார்த்துத்தான் விடுவோம்எவ்வளவு தான் துளைக்கிறதென்று*****************************************
Popularity: 4%
எழுதாத கவிதை
Posted by premkalvettu as Uncategorized
கிறுக்கலாய் படுகிறதுஎல்லாமேதோளில் சாய்ந்தபடிநெஞ்சில் நீ எழுதியகவிதைக்கு பிறகு—————————யாரையோ தேடுவதாய்தேடிப் பிடிக்கின்றன உன் விழிகள்நான் பார்ப்பதை—————————உன் பாரங்களோடுஎன் மீது சாய்கிறாய்மிதக்கிறேன் நான்—————————பார்க்காத தருணத்தில்பார்த்துவிட படபடக்கிறதுஉன் கண்கள்உன் பார்வையைகவ்விவிட காத்திருக்கிறதுஎன் கண்கள்இரண்டிற்குமாய்ஏங்கித் துடிக்கிறது என் இதயம்————————–யாருக்கும் தெரியாமல்சந்தித்துக் கொண்ட நம் பார்வைகளைகாட்டிக்கொடுக்கிறதுஉன் வெட்கம்————————-
Popularity: 4%
Popularity: 4%
அரசியல்
Posted by premkalvettu as Uncategorized
அடியே இந்திராநம்ம பொழப்பே நாத்தம் புடிச்சபொழப்பா இருக்குஇதுல இவுக கூத்தக் கேட்டியா!?சாதிக்க பொறந்தவுகசாதியவச்சி பிரிச்சிடாதிகன்றாகஅப்படியேசாக்கடைய அள்ளஅவுக சாதிக்காரவிய எப்ப வாராகன்னுகேட்டு சொல்லலாமுல்லகால் வயித்து கஞ்சிக்குவழியில்லனாலும்மந்திரம் சொல்லி சம்மதிப்பாகமலம் அள்ள சம்மதிப்பானுவலாஅடியே நீ எதாவது ஆக்கினியாஅரிச்சி அரிச்சி பாத்தாலும்ஒன்னும் அகப்படலியடிமுந்தா நேத்து வச்ச கஞ்சியிலபருக்ககூட மிஞ்சலயடிவருசத்துல பாதி நாலுபட்டினியா கெடந்தாலும்கேக்க ஒரு நாதியில்லஏதோமூணு வேள சாப்பிடலியாம்மிகப்பெரிய போராட்டமுன்னுபோஸ் கொடுக்குறானுகஎடுபட்ட பயலுகஇத வேற போட்டு போட்டுகாட்டுறானுகபடப்பொட்டியிலஇதெல்லாம் காணாதுன்னாதலித் எழுத்தாளர்ன்னு சொல்றான்என்னயும் சேத்துக்கன்றானுங்கஅதுசரிஎந்த கக்கூச எப்ப கழுவ வர்றானுங்கன்னுஎழுதினா நல்லாயிருக்கும்சரி நமக்கெதுக்கு […]
Popularity: 4%
சத்தமில்லாமல் வாசிக்கவும்
Posted by premkalvettu as Uncategorized
தனிமை..தனிமை..கண்ணுக்கெட்டிய தூரம்வரையாருமில்லைநான் யார்?அவசியமில்லாமல் போகிறதுமுதன்முதலாகநூற்றாண்டுகளின் ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்இந்த மழைக்காகஅறிந்தோ அறியாமலோபடிந்து போன நூற்றாண்டுகளின் கரையைகழுவதற்காக காத்திருக்கிறேன்எப்போது நிகழ்ந்திருக்கும்?வெற்றிக்காண காரணம் என்ன?இன்று வரை அறியமுடியவில்லைபண்பாட்டின் மீதானபடையெடுப்புஆணாதிக்கத்தின்அந்த வெற்றியில்தான்நாட்டப்பட்டிருக்க வேண்டும்கற்பின் கொடிகம்பம்யோனியில்தன் இருப்பைஉணர்த்திக் கொள்வதற்காகதிடிரென்றுநியமித்துக்கொண்டிருக்கிறதுபண்பாட்டு காவலர்களைநான் நடந்துகொள்ளவேண்டிய விதம்பற்றிவிவரணப் படம் எடுக்கப்படுகிறதுகலை இயக்குநரால்கலைக்காகவேகலைஞர்களை மட்டுமே நம்பி.இரத்தங்களை சொட்டும்வீச்சரிவாள்கள்அது என் யோனியின் இரத்தம்என்பதில் பெருமிதம் கொள்கின்றன..நாளை மருத்துவர்களின்முயற்சியால் இப்படி கூட நடக்கலாம்“இலவச யோனி தைப்பு முகாம்”அன்றைக்கும் கூட சன்னமாய் தான்ஒலிக்கப்போகிறதுஉங்கள் ஆண்குறிகளை கூடவெட்டிக் கொள்ளலாம் எனும் குரல்.பத்தவச்ச […]
Popularity: 4%
பனித்துளி
Posted by premkalvettu as Uncategorized
மிகச்சிறந்த கவிதைகள்எழுதப்படுவதில்லைஉணரப்படுகின்றனஉனைப்போல.———————-தவிக்கிறது மனதுஇலையின் நுனியில் பனித்துளி———————-உன் பார்வைகள்குத்தி பார்க்கின்றனஎன் காதல்உணர்ச்சிகளை———————உன் கண்களில் தெரிகிறதுஎன் வேதனையின் அளவு.————————-என்றோ உன்கண்ணீர் துளிகள் நனைத்தசட்டைஈரமாகவே இருக்கிறதுஇன்றும்.——————-
Popularity: 4%
Popularity: 4%
என் தோழிக்கு சமர்ப்பணம்
Posted by premkalvettu as Uncategorized
கூட்டத்தில் தள்ளி நின்று தேடுகிறது காதல் தேடி அலைகிறது நட்பு!! உன் செல்பேசியின் மௌனம் உரக்கச் சொல்லிப்போகிறது!!?? என் அருகாமை உனக்குத் தேவை என்பதை.. “டேய் எப்படிடா இருக்க” என்ற வார்த்தைகளின் இடைவெளி உணர்த்திப்போகிறது…!!! நீ என் அழைப்புக்காக காத்திருந்த நேரத்தை… “வழியிறான்” என்று சொல்லாமல் எத்தனை முறை தவிர்த்தாயோ?? என்னை யாரும் சொல்லிவிடுவார்கள் என்ற பயத்தில்!! “நட்புக்காலம்” வாசித்த பிறகுதான் புரிந்தது கவனிக்கப்படுகிறோம் நாம்…!!?? நம்மை அறியாமலே..!!! உனக்கு உணர்த்தப்பட்டபிறகே தெரிவிக்கப்படுகின்றன என் கஷ்டங்கள் நம் […]
Popularity: 4%
சுனாமி சிதறல்கள்
Posted by premkalvettu as Uncategorized
புயலுக்கு பின் அமைதி!!!கடலுக்கு மட்டும்…!!——————————இலக்கு நிச்சயமில்லாத பேருந்து,குளோரின் போடப்பட்ட சாலைகள்,பாலத்தின் மேல் படகுமுகமிழந்த நாகை துறைமுகம்பூட்டப்பட்ட வீடுகள்மாஸ்க் அணிந்த மனிதர்கள்,தடுப்பூசி வரிசைகள்,பீடி கேட்கும் பெரியவர்,நாற்றமடிக்கும் உடல்கள்இரத்தம் வழியக் காத்திருக்கும் நாய்சில புதிய மனநல நோயாளிகள்தமிழ் தெரியாதவர்களின் ஹெலிகாப்டர் விசாரிப்புகள்தீண்டத்தகாதவளான கடலன்னைசோற்றுத் தட்டாகிய ரோடுகள்நகைக்காக ஊனப்படுத்தப்பட்ட சடலங்கள்கிறிஸ்தவர்களின் புனித நகரத்தில்இந்துக்களின் நிவாரண வண்டிவிச ஊசி கேட்ட சிலபேர் அழிவின் ஆழம் தெரியாமல் சிரித்த மழலைகள்தரை மட்டுமே எஞ்சிய வீடுகள்ஒரே குழியில் 90 பிணங்கள்போதும் போதும்இனிமேலும் […]
Popularity: 4%
Posted by premkalvettu as Uncategorized
கவலைகள் செத்துப்போன அன்றுயார் யாரோஅழுவதாக கற்பனைசெய்கிறேன்ஏமாற்றிவிடாதீர்கள்வாடகைக்காவது பிடித்துவாருங்கள்அப்படியே உங்களுக்காக சிரிப்பதற்கும்.
Popularity: 5%
Popularity: 5%
தோழி…
Posted by premkalvettu as Uncategorized
* என் மனதில் பதட்டத்தில் நிழல் படிந்திருந்த ஒரு அழகான தினத்தில் நீ அறிமுகப்படுத்தப்பட்டாய்.* பார்க்காமல் விட்டுவிட்டேன் ஒருவேளை நடந்திருக்கலாம் மனதை வருடும் மழையோ இல்லை வானில் நட்சத்திரமோ எதோவொன்று உணர்த்திப்போயிருக்கலாம் எனக்கொரு தோழி கிடைக்கப்போவதை* என் முகம் சத்தமாகவும் வார்த்தைகள் ரகசியமாகவும் சொல்லிப் போகின்றன என் வலிகளை உன்னிடம்* […]
Popularity: 5%

