மனிதக்கோயில்

Posted by J.S.ஞானசேகர் as Uncategorized


மதமென்னும் மதமோயட்டும் - வைரமுத்து



This world would never be at peace until the last priest is strangled by the entrails of the last lover - George Bernard Shaw




(என்றைக்கு நான்கு பேர் ஒருவனின் எழுத்தைப் படிக்கிறார்களோ, எதைச் சொல்லவேண்டும் எதைச் சொல்லக்கூடாது என்ற மிகப்பெரிய பொறுப்பு அவனுக்கு அன்றுமுதல் வந்துவிடுகிறது. அப்பொறுப்புள்ள ஒரு மனிதனாக, எந்தக் காலத்திலும் இறந்து தொலைக்காத ஒரு கருவை உங்கள் முன் வைக்கிறேன். எல்லா விஷயங்களையும் உள்ளது உள்ளபடி சொல்ல, எனது பெரும்பொறுப்பு என்னை அனுமதிக்கவில்லை. அதனால், இக்கவிதையின் தலைப்பு, கவிதைக்குள் வரும் இடத்தில் மட்டும், அதை ஆங்கிலப்படுத்திப் படிக்கவும்)



காலம்: அடுத்த கவிதையில் உள்ளவர்கள் இறப்பதற்கு முன் 15 ஆண்டுகள்



பசிக்கு அழுகும்

பச்சைக் குழந்தை.

ஆண்பெண் வித்தியாசம்

பின்னிரவில் அறிமுகமான

புதுமணத் தம்பதிகள்.

இடப்பக்கம் வளர்த்தவர்கள்

வலப்பக்கம் வளர்ப்பவர்கள்.



இந்நேரத்தில்

பாசம் பார்த்தால்

ஒரே இடத்தில்

918 பேர் விஷம் குடித்து

வரலாறு படைக்க முடியமா என்ன?



காலம்: போன மற்றும் அடுத்த கவிதைகளில் இறந்தவர்களுக்கு இடைப்பட்ட காலம்



ஒற்றை மயிரிழையில்

3 கிலோகிராம்

சுமக்கும் அற்புத மனிதன்!

சுமக்கும் பூமியைச்

சொற்பமாய் மிதித்து

துப்பாக்கிக் குழலுக்குள்

53 கிராமங்கள்!



சுட்டுச் செத்தால்

சொர்க்கம் கிட்டும்

அற்ப நம்பிக்கை!



அப்படியே ஆவதானாலும்

கைப்பிடி களிமண்

ஒருவனின் விலாவெலும்பு

கடவுளுக்குக் காலவிரயம்!



காலம்: போன கவிதையில் உள்ளவர்கள் இறந்தபின் ஓர் ஆண்டு



நொடிக்கு ஒருமுறை

15 மில்லியன் செல்கள்

அழித்து போகும்

அற்புத மனித உடலை

அனலுக்கு அர்ப்பணித்தனர்

அற்பமாய் 48 பேர்!



அடுத்த பிறவியில்

அற்புத வாழ்வை

அடையும் நம்பிக்கை!



அப்படியே அடைந்தாலும்

அவ்வுடலுக்கும்

100 டிரில்லியன் அற்புதங்கள்

நொடிக்கொருமுறை 15 மில்லியன்!



காலம்: ஒரிசா முதல் காஸா வரை பூமியை எப்படி சுற்றினாலும் மதம் நம்மைச் சுற்றும் காலம்



கோயிலுக்குள் மனிதனோ

மனிதனுக்குள் கோயிலோ

கும்பிடத் தவறில்லை

மனிதக்கோயில்கள்

மறுபடியும் தோன்றாதவரை!



சொர்க்கம் காட்டுவது

கடவுள் காட்டுவது

என்பதெல்லாம் பழைய கதைகள்!

நீயே சொர்க்கம்

நீயே கடவுள்

என்பதுதான் புத்திலக்கியம்!



இப்போதெல்லாம்

உயிருக்கு உத்திரவாதம்

பெரும்பாலும் இருப்பதாகப்படுகிறது.

உறுபொருள்

கன்னிமை

காலம்

சுயமரியாதை

ஆறாம் அறிவு

இவை பத்திரம்!



-ஞானசேகர்

Popularity: 4%



அத்தைமார் முத்தம்

Posted by J.S.ஞானசேகர் as Uncategorized


(எனது ஒரு சிறு சிறுகதை முயற்சி)



அண்ணன் தம்பிகள் பாகப்பிரிவினை, கட்டிக்கொடுத்த அக்காவின் நகைகளைக் கடன்வாங்கி தங்கச்சி கல்யாணம், முப்பது கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உறவுகளைச் சுருக்கிக்கொண்டு சொந்தமண்ணே உலகம், விவசாயவேலை உறுதியானாலும் பள்ளிக்கூடப்படிப்பு, கோழிச்சண்டை, அருவாள் சண்டை, இதுபோன்ற பழக்கவழக்கங்கள் கொண்ட ஒரு சராசரி கிராமம்தான் எனக்கு சொந்தமண். மற்ற ஊர்களைப் போல் திருவிழா எடுத்து சொந்தபந்தங்கள் பார்க்க முடியாத சின்ன கிராமம், திருச்சியில் குடியேறின ரெயிவேகாரரையும் சேர்த்தாலே மொத்தம் எட்டு குடும்பங்கள். “அந்தக் கல்லாங்குத்துலபோய் இடுப்பொடிஞ்சு சாவுரதுக்கா?” என்று வெளியூர் சொந்தங்களே பெண்தர மறுக்கும் ஓரிடம். “அந்த ஊரு பொண்ணுக்குத்தான்யா கஷ்டம்னா என்னான்னு தெரியும்” என்று வெளியூர்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு பெண்ணெடுக்கும் ஓரிடம். அரசியல்வாதிகூட ஒட்டுக்கேட்காத ஓரிடம்.



அப்பாவுக்கு வேலை மாற்றலாகி நாங்கள் 25 கி.மீ. தள்ளி புதுக்கோட்டையில் குடியேறினோம். இப்போது சித்தப்பா மட்டும்தான் எங்கள் ஊரில் இருக்கிறார். சொத்துப் பிரச்சனையில் பேச்சுவார்த்தை கிடையாது. ஒரே அத்தை, இன்னொரு கிராமத்தில், அதுவும் சீர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை இல்லை. சொந்தபந்தம், ஆறுதல் பேச்சு, பாட்டிமார் கதைகள், தாத்தாக்களின் காமக்கதைகள் எதுவும் இல்லாமலே முடிந்து போனது எனது 13 வருடங்கள்.



அன்று ஒரு உயரமான பெண் எங்கள் வீட்டிற்கு வந்தாள். வாசலில் நின்றிருந்த என் கன்னம் கிள்ளி, ஐந்து விரல்களையும் சேர்த்து அவள்வாயில் ஒட்டிக் கொண்டு, “என்னப் பெத்தவரு” என்று சொல்லிக் கொண்டாள். கன்னத்தின் வலியிலும் ஏதோ ஒரு சந்தோஷம். அதன் அர்த்தம் பிற்காலத்தில் ‘அத்தைமார் முத்தம்’ என்று வைரமுத்து சொல்லித்தான் புரிந்தது. ‘பல அம்மாக்களுக்கு இதெல்லாம் ஏன் செய்யத் தெரியவில்லை?’ என்று இன்னும் குழப்பம். எழுதிக்கொடுத்தைப் படிக்கும் பிள்ளை போல அம்மா ஒப்பித்தாள்:

“வாங்க அண்ணி”

“அண்ணின்னா என்னம்மா?”

“சும்மா இருடா……..அண்ண வல்லங்களா? கமலா எப்புடி இருக்கா?”

“கமலான்னா யாரும்மா?”

“இவன் இப்புடித்தான் அண்ணி. சும்மாவே உம்முன்னு கெடப்பான். ஒரு புது ஆளு வந்துட்டா சும்மா நொய்யிநொய்யின்னுட்டு”

“இந்தாடா சேகரு, மிச்சரு. நல்லா படிக்கிறியா? சித்தப்பா வீட்டுக்குப் போனியா?”

மிக்சரை வாங்கிக்கொண்டே ‘நல்லா படிக்கிறேன்’ என்று தலையாட்டினேன்; ‘சித்தப்பாவா?’ என்று புரியாமல் நின்றேன்.

“வா டம்ளர்ல கொட்டித் தர்றேன்” என்று சொல்லி என்னைச் சமையலறைக்குள் அம்மா இழுத்துச் சென்றாள். ஏற்கனவே வீட்டில் இருந்த மிக்சர் எனக்குத் தரப்பட்டது. அந்தப் பெண் கொடுத்ததை, சீனி டப்பாவிற்குள் அம்மா ஒளித்து வைத்தாள். நான் மீண்டும் அந்தப் பெண்ணிடம் வந்தேன். அவள் என்னைக் கவனிக்கவில்லை; வீட்டின் உத்திரத்தை உட்கார்ந்து கொண்டே சுற்றிப் பார்த்தாள்.

“நீங்க யாரு?”

அவள் என் பக்கம் வந்து, சுவற்றில் இருந்த அம்மா-அப்பாவின் கல்யாணப் போட்டோவைக் காட்டி,

“ஒங்க அம்மா நெத்தியில கயிறு கட்டுறது நாந்தான்” என்றாள்.

புரியவில்லை. எங்களுக்குக் காபி தரப்பட்டது. நான் பக்கத்து மாமி வீட்டுக்குச் சென்றுவிட்டு, ‘கிழக்குச் சீமையிலே’ படம் பார்த்துவிட்டு, இரவு எட்டு மணியைப்போல் வந்தேன்.



அப்பா வரும் நேரம். ஆயிரம் காலடி ஓசைகளில் அப்பா காலடி ஓசையை அறிந்துகொண்டவளாய், அவரை வரவேற்க அம்மா தயாரானாள். அந்தப்பெண் மூலையில் போய் நின்றுகொண்டாள். அப்பா அவளைப் பார்த்துவிட்டார். செருப்பைக் கழட்ட தடுமாறினார்.

“வாப்பா! மச்சான் வல்லையா? நல்ல இருக்கீங்கல்ல. மூத்தபய புதுநன்மைக்குக்கூட இந்த அண்ணனக் கூப்புடல. தாய்மாமன் என்னா செத்தாப் போயிட்டேன்?”

அப்பா அழவில்லை. அந்தப் பெண் அழுதாள்.

“என்னண்ணே பண்றது? பொண்ணாப் பொறந்துட்டேனே? கட்டுனவன் சொல்லறதுதானே பத்துக்கட்டள”

யாருக்கும் முகம் பார்த்து பேச துணிவில்லை. அழுகை பயமா? குற்ற உணர்ச்சியா? சொல்வது பொய்யா? அவ்வயதில் புரியவில்லை. அப்பாவின் கையிலிருந்து Little Hearts பிஸ்கட்டை நைஸாக உறுவினேன்.



மூக்கு சிந்தி முந்தானையில் துடைத்துவிட்டு, அவளே மௌனம் கலைத்தாள்.

“ஏன் புருஷன் பாவிப்பய செஞ்ச தப்புக்கெல்லாம் நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேண்ணே. ஏன் சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னுதான் ஏன் பொண்ணு சடங்குக்குத் தாய்மாமன அழைக்க வந்திருக்கேன்”

“கமலாவா அண்ணி? மேஜராயிட்டாலா?” என்றாள் அம்மா.

“மேஜர்னா என்னாம்மா? மேஜர் சுந்தர்ராஜன் மாதிரியா?”

கொஞ்சம் சிரித்தார்கள், அழுத இரண்டு பேரும். வெற்றிலை பாக்கில் ஐந்து ரூபாயைத் திணித்து அப்பாவிடம் அவள் நீட்டினாள். அதை வாங்கும்போது தாய்மாமன் தெனாவெட்டு அழுகையிலும் லேசாகத் தெரிந்தது அப்பாவிடம்.



அப்புறம் எல்லாரும் ஒன்றாக அமர்ந்தோம். ஒவ்வொருத்தரும் பாவமன்னிப்பு கேட்பதுபோல் “நான் அப்புடி பண்ணியிருக்கக் கூடாது? நீ செஞ்சது தப்பு?” என சமாதானம் செய்து கொண்டனர். இடையில் பேச்சைத் திசை மாற்ற “ஏன் மருமகன் எனக்கிட்ட பேசவே மாட்டேங்கிறாண்ணே” என்றாள் அவள். “ஏன் தங்கச்சிடா. ஒனக்கு அத்தை. புதுசுல. பயப்புடுறான். பழகிட்டான்…… தலக்கி ஏறிருவான்”.

“அத்த” என்று சொல்லிப் பார்த்தேன்.

மீண்டும் கிடைத்தது ஒரு அத்தைமார் முத்தம்.

“எத்தனாவது படிக்கிற”

“எட்டாவது படிக்கிறேன். டி.ஈ.எல்.சி.ல”

“ரெண்டு வருஷம் முன்னாடிதான் பொறந்தியா? கமலா பத்தாவது படிக்கிறா? அண்ணன் சம்பந்தம் எனக்குக் குடுத்து வெக்கல”

சாப்பாட்டு நேரம். நான்கு தட்டுகள்.

“அண்ணே, நம்ம தங்கச்சி செத்த அன்னக்கி நாம சாப்புட்டது மாதிரி சாப்புடுவோமா?”

அப்பா அவர் தட்டைத் தள்ளி வைத்துவிட்டு, அத்தையின் தட்டுகளில் பிணைய ஆரம்பித்தார். என் கையையும் சேர்த்து ஒரே தட்டில் மூன்று கைகள்.

“அப்புடியே எங்கண்ணன் மாதிரி”

மீண்டும் ஒரு அத்தைமார் முத்தம். கன்னத்துச் சோற்றைத் துடைக்கவில்லை. சாப்பிட்ட சோறு கொஞ்சம் வித்தியாசமாய் உப்புக் கரித்தது.



இரவு முழுவதும் அப்பாவும், அத்தையும் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். தூங்கும் என்னை யாரோ கன்னத்தில் கிள்ளுவது தெரிந்து எழுந்தேன். அத்தையை அம்மாவும், அப்பாவும் வழியனுப்பிக் கொண்டு இருந்தார்கள்.



சில நாட்கள் கழித்து, ஒரு புதன் கிழமையில், ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டு நாங்கள் ஒரு கிராமத்திற்குச் சென்றோம். பின்னால் ஒரு ஆட்டோவில், வாழைத்தார், இனிப்பு வகைகள், இன்னும் பல பாத்திரங்கள் எங்களைத் தொடர்ந்து வந்தன. அந்த ஓட்டுவீட்டின் முன்பந்தலில் இருந்து அத்தையும், ஒரு மீசைக்காரரும் எங்களை வரவேற்றனர். அத்தையின் பக்கம் போனேன். அத்தை புரிந்து கொண்டாள். மீண்டும் அத்தைமார் முத்தம்.



எல்லோரும் எங்களை ஆச்சரியமாகப் பார்த்தனர். அந்த கூட்டத்தில் முதல் வரிசையில் நாங்கள் மூவரும் அமர்த்தப்பட்டோம். முன்னால் இருந்த சின்ன மேடையில் “அ.கமலா” என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு உயரமான பெண் அதற்குமுன் நகைகளுடன் எங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளை அத்தை எங்களிடம் அழைத்துவந்து அம்மா-அப்பா காலில் விழச் செய்தாள். எங்களை அறிமுகப்படுத்தியும் வைத்தாள். நான் பலூன் வைத்து விளையாடும் என்போன்ற பயல்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.



ஒரு பையனின் பலூன் கூரையில் மாட்டிக் கொண்டது. அதை எடுத்துத் தந்தேன். எனக்கு விவரம் தெரிந்து இரண்டாவது முறை என் அம்மாவிடம் அடி வாங்கினேன். ஏன் என்று தெரியவில்லை. அப்பா தனியாக அழைத்துப்போய், என்னிடம் சொன்னார்:

“அவனுக்கு ஏன்டா பலூன எடுத்துக் கொடுத்த? அவன்பேரு இருதயராசு. ஏன் தம்பி மகன். ஒனக்கு தம்பி. இந்தா 100 நூபா, அம்மாவுக்குத் தெரியாம அவனும் நீயும் எங்கையாவது கடக்கிப் போயி ஏதாவது சாப்டுட்டு வாங்க”

அவனைத் தேடினேன். அவன் கிட்டத்தட்ட என் அப்பா சாயல் உள்ள ஒரு ஆளின் மடியில் அமர்ந்திருந்தான் பலுன் வெடித்துப்போய் இருந்தது.

“ஓன்பேரு இருதயராசா?”

“ஆமா”

“நீதான் சேகரா?” ஒரே தொனியில் கேட்டனர் அவனது அம்மாவும், அப்பாவும்.



அவனது அம்மா என் கன்னம் கிள்ள வந்தாள். நான் விலகிப் போனேன்.

“இருதயராசு, நான் பலூன் வாங்கித்தாரேன் வாடா”

அவன் அப்பா காசு தேடினார்.

“எங்க அப்பா காசு கொடுத்துருக்காரு”

அவன் அப்பா அவனை மடியில் இருந்து தூக்கிவிட்டார். அவன் அம்மா அவன் கையைப் பிடித்தார். நான் மறுகையைப் பிடித்தேன். இருவரும் பலூன் வாங்கப் போனோம். இருவரின் அம்மாவும் எங்களைப் பார்த்தார்கள். இருவரின் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவனோடு வந்து அப்பா-அம்மா பக்கத்தில் அமர்ந்தேன். அவன் அப்பா மடியில் அமர்ந்தான். தகப்பனுக்குப் பாடம் சொன்ன முதிர்ச்சி எனக்கு அப்போது தெரியவில்லை.



மீண்டும் அத்தை எங்கள் பக்கம் வந்து அமர்ந்தாள். இங்கிருந்தே கமலாவிற்கு ஏதேதோ சைகையெல்லாம் காட்டினாள். திடிரென ஏதோ ஞாபகம் செய்த அத்தை, ஒரு அத்தைமார் முத்தம் கொடுத்து, கமலாவிடம் கொடுக்கச் சொல்லி, ஒரு திப்பெட்டியைக் கொடுத்தார்.



(ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டு சற்றே மனநிலையை மாற்றிக் கொண்டு மீண்டும் தொடருங்கள்)



கமலாவிடம் வந்தேன், ஒரு தீண்டத்தகாதவன் கருவறைக்குள் நுழைவதுபோல் ஒரு தயக்கத்துடன். தோழியர் கூட்டத்திற்கு நடுவில் அவள் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.

“கமலா, இந்தா தீப்பட்டி. அத்த குடுத்தாங்க”

“இத்துனூன்டு இருந்துட்டு என்ன பேர் சொல்லிக் கூப்புடுற” என்று ஒருத்தி Adam-teasingஐ ஆரம்பித்து வைத்தாள்.

“ஏ மெரட்டாதீங்கடி, அவன் எங்க பெரிய மாமா பையன். சேகர். இப்பத்தான் மொதமொதன்னு எங்க வீட்டுக்கு வர்றாங்க”

தீப்பெட்டி கைமாறியது.

“என்ன சேகரண்ணே, நீங்கதான் இந்த கமலாவக் கட்டிக்கப் போறீங்களோ?”

“நல்ல ஜோடிடி. சரியான குட்டையன். நீ ஒரு ஒட்டகச்சிவிங்கி”

நான் வனஜாவிடம் பேசிய ஒரு வாக்கியத்துடன் விருட்டென்று வந்துவிட்டேன். நான் ஏதாவது போட்டுக் கொடுக்குறேனா என்று தோழியர் பார்த்துக்கொண்டு இருந்தனர். மறுநாள் மாமன் விருந்து முடிந்தவுடன், அத்தை குடும்பம் நன்றாகப் பழக்கமாயிருந்தது, வனஜாவைத்தவிர. சித்தப்பா விஷயம் முன்னேற்றமில்லை.



“ரெண்டு வருஷம் முன்னாடிதான் பொறந்தியா?” என்ற ஏக்கத்துடன் அத்தைமார் முத்தம் வாங்கி கொண்டு வீடு திரும்பினோம். என்னிடம் பேசிய-எனக்காகப் பரிந்து பேசிய முதல் பெண் என்ற முறையில் வனஜா மறக்கப்படாமல் இருந்தாள். அந்த வருடம் நடந்த அத்தை ஊரின் திருவிழாவிற்கு அப்பா மட்டும் போய்வந்தார். என்னை வனஜா ரொம்பா விசாரித்ததாகச் சொன்னார்.



பத்தாம்வகுப்பு லீவில் சும்மா இருந்த என்னை அந்த வருடம் அத்தை ஊர் திருவிழாவிற்கு தனியாக அனுப்பி வைத்தார். எனக்கு பலத்த வரவேற்பு. போனவுடனேயே சாப்பாடு. அன்று என்னோடு அப்பா இருந்ததால் பேச பயந்த கெழவிகள் எல்லாம் என்னைச் சுற்றி உட்கர்ந்துகொண்டு நொய்நொய் என்று கேள்வியாய்க் கேட்டுக் குடைந்தன. நான் வனஜாவை மட்டும் எதிர்பாத்துக் கொண்டே இருந்தேன். வந்தே விட்டாள்.

“என்ன மாப்புள்ள. மாமா அக்கால்லாம் வல்லையா?”

“அவுக வல்லைங்கவும்தான் நான் வந்தேன்”

கிழவிகளுக்குப் புரியவில்லை. அவள் கண்களை புருவத்தில் சொருகிப் பார்த்தாள். நான் சோற்றைப் பார்த்தேன்.



திண்ணைக்கு வந்தேன். மீண்டும் கூட்டம். இருதயராசு வீதியில் விளையாடிகொண்டு இருந்தான். என்னைப் பார்த்தும் அவன் பலூன் கேட்கவில்லை. வனஜா எல்லாரையும் விலக்கிவிட்டு, என்னோடு தொடை உரசி அமர்ந்தாள். இவளைப் பார்த்தால் கேட்க வேண்டும் என இத்தனை நாள் பொதித்து வைத்திருந்த ஒரு ஆசை இப்போதும் என் சிந்தனையில் இருந்தது. ஒருவேளை அவமானம் ஆகிவிட்டால்? அதனால் தனியாகக் கேட்கலாம் என்று காத்திருந்தேன்.

“பப்ளிக்ல எவ்வளவு மார்க் வரும்?”

“410 ஒட்டி”

“அடேயப்பா?”

“அப்புடின்னா? பாசுதானே” இது அத்தை.

“ஆமா அத்த. பாசுதான். என்ன வனஜாவக் கடக்கிக் கூட்டிப்போகச் சொல்லுங்க”



அத்தையின் சம்மதத்துடன் இருவரும் நடந்தோம். வழியில் ஒரு கருவேளக்காடு. இதுதான் சரியான இடம். கேட்டு விடலாமா? சுற்றிப் பார்த்தேன். எங்கள் பின்னாலேயே ஒருவன் வந்துகொண்டிருந்தான்.

“டேய், இருதய ராசு இங்க என்னடா பண்ணுற”

“அண்ணே, பலூன் வாங்க காசு குடுண்ணே”

“அத அங்கேயே கேட்டிருக்கலாம்லே”

“அம்மா அடிக்கும்ணே”

அவன் கையில் 50 ரூபாய் திணித்துவிட்டு, கடை நோக்கி நடந்தோம், சித்தப்பா ஞாபகத்தில் பேச்சுவரவில்லை. ஆளுக்கொரு கலர் குடித்துவிட்டு, மீண்டும் நடந்தோம். ஏதோ சேசிக்கிட்டு வந்தோமே என்று யோசித்து,,,, “ஆமா, இதுதான் சரியான நேரம். கேட்டு விடலாம்”

“உங்கள நான் என்ன சொல்லிக் கூப்புடுறது?”

“பேர் சொல்லித்தானே கூப்புடுற. அப்புடியே கூப்புடு”

“பேர் சொல்லிக் கூப்புட ஒருமாதிரி இருக்கு. சரி வனஜா. நான் ஒண்ணு கேப்பேன் தப்பா நினைக்கக் கூடாது”

“சொல்லுடா”

“மொதல்ல டா போடுறத நிறுத்து. பேர் சொல்லிக் கூப்புடு”

“சரிங்க சேகர் சார். சொல்லுங்க தப்பா நெனக்கல”

“பக்கத்துல வா”

“இது போதுமா”

“மேட்டுல நிக்காம, கொஞ்சம் கீழ எறங்கி, இன்னும் பக்கத்துல வா”

“போதுமா”

“தோளோட தோள ஒரசி நில்லு”

“போதுமா”

“அப்பா, போய் ஓன் கூட்டாளிங்கக் கிட்ட சொல்லு. நான் குட்ட இல்லன்னு. ரெண்ருபேரும் ஒரே ஒயரம்தான்”



வீட்டுக்குச் சந்தோஷமாக வந்தேன்-வந்தோம். மீண்டும் அதே திண்ணை, அதே கிழவிகள் கூட்டம். ஒரு பெருசு ஆரம்பித்தது:

“பெரியவரு மகனுக்கு ரொம்ப தெகிரியந்தான்”

“ஏன்”

“ஒரு வயசுப் புள்ளையோட சுத்திட்டுவர்ற”

“ஒனக்கு ஒரு வயசா வனஜா?”

அவள் மட்டும் சிரித்தாள். அவளே கேட்டாள்.

“ஏன் கெழவி, மாமா பையந்தானே கூடப்போனா என்ன?”

பெரியவங்களக் கெழவின்னு மரியாதை இல்லாமல் கூப்பிடலாம் போல!

“இல்ல அவருக்கு ரெண்டு வயசு கொறச்சு. ஒத்து வராது. ஊரு தப்பா பேசும்”

சின்னவங்கள அவருன்னு மரியாத போட்டுக் கூப்பிடலாம் போல!

பூட்டோவ விட அவரு பொண்டாட்டி 15 வயசு மூத்தவங்கன்னு சொல்லி, ஜோக் அடிக்கலாம்னு பார்த்தேன். பூட்டோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று விட்டுவிட்டேன்.



“இவுக அம்மாவ நான் அக்கான்னு கூப்புடுறேன். இவன் எனக்கு அக்கா பையன்”, என்றாள் வனஜா. அவள் தொடைமேல் முதல் முறையாகக் கைவைத்தேன். மறுகையை வாயில் வைத்துக் கொண்டு, தலை குனிந்து, குருகுல மாணவன் போல, காதோரமாய்,

“சரிங்க சித்தி”

“நீ வனஜான்னே கூப்புடுடா”

“இல்ல சித்திதான், சித்தி”

“சித்தின்னா அர்த்தம் வேற. சரி அத்தாச்சின்னு கூப்புடு”

“இல்ல சித்திதான், சித்தி”

நான் அவளை, இல்லை அவங்களைச் சித்தின்னு குப்புட்டது எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியும்.



திருவிழா முடியும்வரை நாங்கள் இருவரும், ஒன்றாகவே திரிந்தோம். நான் “சித்தி” எனக் கூப்பிட்டுத் திரிவதை யாரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. நான் கிளம்பும்போது, தூங்கிக்கொண்டு இருந்ததால், போர்வை விலக்கி, “போய்ட்டு வர்றேன் சித்தி” எனக் காதில் ரகசியம் சொல்லிவிட்டு, கையில் திணிக்கப்பட்ட 100ரூபாயுன் திரும்பினேன். அது அப்படியே இருதயராசு கைக்கு இடம் மாறியது. ஏதோ விட்டுச் செல்வதுபோல் மனம் பதபதைத்தது. பஸ் ஏறும்போதுதான் ஞாபகம் வந்தது, வேகமாய் ஓடிவந்து வாங்கிக் கொண்டு திரும்பினேன், அத்தைமார் முத்தம்.



(ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டு சற்றே மனநிலையை மாற்றிக் கொண்டு மீண்டும் தொடருங்கள்)



பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன், இரண்டு வருடங்கள் திருச்சியில் படிப்பு. மீண்டும் நல்ல மதிப்பெண். திருச்சியிலேயே பொறியியல் படிப்பு. வாழ்க்கை திருச்சியிலேயே அமைந்துவிட்டதால், அதிகம் வீட்டுக்குச் செல்வதில்லை. இடையில் எதர்த்தமாக ஒருமுறை அப்பாவுடன் சித்தி பேசிக்கொண்டு இருந்தபோது, நான் பக்கத்தில் இருந்தும், சித்தி என்னுடன் பேச விரும்பவில்லை.



நான் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, ஒருமுறை வீட்டுக்குத் திரும்பும்போது, சித்தி ஒருவருடன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, பேருந்தில் போய்க்கொண்டு இருந்தாள். என்னைப் பார்த்ததும், அவரை எழுந்திருக்கச் சொல்லி, என்னை அமரச் செய்தாள். அவர் முன்னால் சென்று ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டார். நான் “ஏன் என்னிடம் போனில் பேசுவதில்லை?” என சித்தியைத் திட்டினேன். அவள் நான் எதிர்பார்க்க முடியாதவகையில், ஓர் உண்மைக்கதை சொன்னாள்.



திருவிழா முடிந்தவுடன், எங்கள் சொந்தக்காரர்களில் யாரோ ஒருவன் எங்க அப்பாவிடம் நாங்கள் சுற்றியதைப்ப்ற்றி தவறாகப் போட்டுக் கொடுக்க, எங்க அப்பா அத்தை வீட்டுக்குப் போய், “நல்லா படிக்கிற ஏன் பையன வளச்சுப் போடலாம்னு பாக்கிறீங்களா? இதுக்குத்தான் சொந்தம் கொண்டாடிக்கிட்டு வந்தீங்களா?” என்று காட்டுக்கத்து கத்த, மீண்டும் சொந்தம் விட்டுப்போகக் கூடாது என அத்தை சமாதானம் பண்ணி, அவசர அவசரமாய் தனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பட்டதாய்ச் சொன்னாள். பக்கத்தில் இருந்தவர்தான் கணவன் என்றும், ரெண்டு மாதம் ஆகிவிட்டது என்றும் சொன்னாள்.

“அழாம சொல்லுங்க சித்தி, இது உண்மையா?”

“உண்மைதான். இந்தக் கதையும், சித்தி என்கிற உறவும். சித்தின்னு நீ கூப்புடுறது எனக்கு மாதிரி எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தா இந்தப் பிரச்சினையே இல்ல”

“இது அவருக்குத் தெரியுமா?”

“நான் சொன்னதில்ல. அவரும் கேட்டதில்ல. ஆனா கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்”

நான் பஸ்ஸைவிட்டு இறங்கிவிட்டேன், ஏதோ ஒரு இடத்தில்.



அப்பாவிடம் இரவு முழுவதும் சண்டை. அவர் பதிலே பேசாமல் தலை குனிந்து நின்றார். நம்பிக்கை இல்லாத அவர்களிடம் பேசவே பிடிக்கவில்லை. ஆனால் ஊரை நம்பும் பெற்றோர் அவர்கள் எதிர்பார்ப்பை எல்லாம் படிப்பிலும், நடத்தையிலும் பூர்த்தி பண்ணி வைக்கும் தன் மகன் மீது நம்பிக்கை வைக்கவில்லையே ஏன்? என்று ஒரே ஏக்கம்தான். எல்லா பெற்றவர்களுக்கும் வரும் ஒரு குருட்டுபாசம் அது என்பது எப்போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதன்பிறகு, சித்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அப்பா சொன்னார். நான் கண்டுகொள்ளவில்லை.



நான் கல்லூரி முடிக்கப் போகும் நேரத்தில், ஒருநாள் வீட்டிற்கு வந்திருந்தேன். கடைவீதியில், நடந்து போய்க்கொண்டு இருக்கும்போது, சித்தி ஒரு குழந்தையுடன் சோர்ந்துபோய் அமர்ந்திருந்தாள்.

“சித்தி, என்ன இங்கே? இது யாரு பாப்பாவா? கொஞ்சம் இருங்க வர்றேன்”

பாப்பாவின் கையில் மாட்டிவிட்டேன், கடன் சொல்லி வாங்கி வந்த வளையல்களை.

“சொல்லுங்க. ஏன் எளச்சிப்போயிட்டீங்க சித்தி?”

“கையில பொறப்பாடு வந்திருக்கு. மந்திருக்க. ஒங்க சித்தப்பா கூட்டிட்டு வந்தாரு”

கையை நீட்டினாள். நான் கையைப் பற்றி இங்கே சொல்ல விரும்பவில்லை (கரு திசைமாறிவிடலாம்).

“சித்தப்பாவா?”

“ஏன் புருஷந்தான். அதுக்குத்தான் அப்பவே சொன்னேன், அத்தாச்சின்னு கூப்புடச் சொல்லி…”

இருவரும் சிரித்தோம். அவர் வந்தார்.

“வாங்க, தம்பி. ரொம்ப நேரமா ஆட்டோ கேக்குறேன். தூரம்னு யாரும் வரமாட்டீங்கிறாங்க. நீங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க”

“அப்பாட்ட வண்டி வாங்கிட்டு வர்றேன்”

“எனக்குன்னு கேக்காத. ஓன் பிரண்டுக்குன்னு கேளு” என்றாள் சித்தி.

நான் “வனஜாவுக்கு முடியல. வண்டி வேணும்னு” எடுத்துட்டு வந்தேன்.



கிழம்பிய என்னை அவர்,

“எனக்கு மனசு சரியில்ல. நீங்களே ஓட்டுங்க”

“சரி”

நான் ஸ்டார்ட் செய்துவிட்டேன். இருவரும் ஏறாமல் நின்றனர்.

“நீ ஒக்காரு வனஜா”

“இல்ல”

ஏதோ சித்தி அவர் காதில் சொன்னார்.

“சீ. நீ ஏன் பொண்டாட்டிடீ. அவன் ஓன் தம்பி மாதிரி. ஒக்கரு” அவர்தான்.

“எறங்கு கீழ. ஒரு பக்கம் ஒக்கந்தா பேலன்ஸ் பண்ண முடியாது. ரெண்டு பக்கம் கால் போட்டு ஒக்காரு” அவர்தான்.

மறுத்த அவளை எப்படியோ இருபக்கம் கால்போட்டு அமரச் செய்தார். அவள் என்னை முடிந்தவரை தொடாமல் அமர்ந்தாள், தொடைமேல் கைபோட்ட அதே வனஜா சித்திதான். மனதைக் கல்லாக்கி ரோட்டின்மேல் கண்போட்டு, எங்கள் உறவை யார் தப்பாய் புரிந்து கொண்டால் என்ன? சித்தியின் கணவர் என்னைத் தெய்வமாகப் பார்க்கிறாரே அது போதும். அவர்களை 30 கி.மீ. தள்ளி ஒரு கிராமத்தில் விட்டுவிட்டு, “மந்திரிக்கிறது எல்லாம் சரிப்படாது. ஆஸ்பத்திரி போங்க” என்று சொல்லிவிட்டு, சித்தி என்று சொல்லவந்த வாயைக் கட்டுப்படுத்திவிட்டு,

“போய்ட்டு வர்றேங்க” என்று சொல்லிவிட்டு, கிளம்பினேன்.



பின் நானும் படிப்பில் மூழ்கிவிட்டேன். இரண்டு வாரங்கள் கழித்து, சித்தியும் இறந்து போனாள். எனக்கு சித்தியின் மரணம், தகனம் முடிந்து மூன்று நாட்கள் கழித்தே சொல்லப்பட்டது. இந்த முறை நான் வாதம் செய்யவில்லை. இதே மனநிலையுடன் இருக்கும்வரை நான் வாதம் செய்யப்போவதுமில்லை.



எல்லோர் முன்னிலையிலும் “சித்தி” என்று இப்போது கூப்பிடத் தயார்; சித்தி இல்லை. சித்தியின் மகள், பாப்பா இருக்கிறாள்; நான் வளையல் போட்டால், உலகத்திற்கு அது என்ன அர்த்தமோ? அத்தை இருக்கிறாள். அதே பழைய நம்பிக்கையுடன் கிடைக்குமா, மீண்டும் ஒருமுறை ஒரு அத்தைமார் முத்தம்?



-ஞானசேகர்

Popularity: 6%



ஆண்சிசுக்கொலை

Posted by J.S.ஞானசேகர் as Uncategorized


எனது சுதந்திர எல்லைக்குள் எனது உரிமைகளின் எல்லையை மீறாமல் இதோ கடவுளுக்கான எனது இலக்கணக்குறிப்பு. இது நமக்கான இலக்கணக்குறிப்பு என ஏற்றுக்கொள்ளப்படும்போது, ஆயிரக்கணக்கான ஆண்களின் மூலம் தொலைந்துபோன தலைமுறைகளின் மதமற்ற ஆதரவு நமக்குண்டு.



காலம்: கிறிஸ்து பிறப்பிற்கு முன் 3ம் ஆண்டு, கிறிஸ்து பிறந்தபின் 33ம் நாள்



(இரண்டு மாதக்குழந்தை முதன்முதலாய்ப் பேச முடியாமல் அழுத வார்த்தைகள் இவை. மறு பிறப்பென்று ஒன்று இருக்குமெனில், நம்மில் ஒருவரின் குரலாகக்கூட இது இருந்திருக்கலாம்)



மார் முட்டி

பால் குடிக்கிறேன்

வெடுக்கென பிடுங்குகிறான்

மன்னனின் படைவீரன்.



கச்சை கழட்டி

பாலினம் பார்க்கிறான்

பொக்கை வாயில்

சிரிப்பைப் பார்க்கிறான்.



துள்ளிக் குதிக்குமுடல்

செஞ்சூடு உணர்கிறான்

கட்டற்று ஊற்றும்

சிறுநீர் உணர்கிறான்.



எல்லாருக்கும்

கழுத்தில் கீறினான்

எனக்கு மட்டும்

குறியில் கீறினான்.



கண்ணில் நீர் நிற்க,

வாயில் பால் நிற்க,

குறியில் குருதி நிற்க,

எனக்கான சந்ததி நிற்க,

தாயின் இதயம் நிற்க

அவன் நடக்கலானான்

அடுத்த ஆண்குறிதேடி.



ஆண்டு ஆயிரம்

காலம் ஓடியது.

ஆண்டு நூறு

போர் ஓடியது.

வயிற்றுக்கடுப்பில்

மலம் ஓடியது.

நூறு ஆயிரம்

உயிர் ஓடியது.



மக்கள் காக்க

கடவுள் வந்ததாய்

மதம் வந்தது.

மதம் காக்க

ஆண்டு நூறாய்ப்

போர் வந்தது.



ஆணாய் மட்டுமே

பிறப்பவன் கடவுளா?

ஆணாய்ப் பிறந்ததற்காக

கத்திமுனையில் கொல்லப்பட்டு

கடவுள் எனப்பட்டவனையும் காத்த

நாங்கள் கடவுளா?



அறிவு ஆறெனில்

கடவுள் யாரென

கட்டாயம் கண்டிருப்பீர்கள்!



-ஞானசேகர்

Popularity: 2%



திரைக்கதையில் ஒரு கதைதேடும் வசனம்

Posted by J.S.ஞானசேகர் as Uncategorized


கண்ணொடு கண்ணினைக் கவ்வி

ஒன்றையொன்று உண்ணவும்

நிலைபெறா உணர்வும் ஒன்றிட

“கண்ணச் சிமுட்டாதடி கள்ளி”

என்கிறான் கதாநாயகன்.

தவம் கலைந்து முதுகு திருப்பி

கால் கட்டைவிரல் காண்கிறாள்

கதாநாயகி.



கதைக்குத் தேவையான

முக்கிய முத்தக்காட்சி முடிகிறது.

தலை கவிழ்ந்து

பாலோடு தேன்கலந்தற்றே என

குறளில் கிண்டல் செய்கிறாள்

கதாநாயகி.

தலை நிமிர்த்தி

“எனக்குத் தராமல்

எப்போது கோக் குடித்தாய்?”

என்கிறான் கதாநாயகன்.



திரைக்கதையின் சுவாரஸ்யத்தில்

எதுவும் செய்ய மறந்து போகிறான்

கதாநாயகன்.

ஹவுஸ் ஃபுல் காட்சியில்

ஏமாந்து போகிறாள்

கதாநாயகி.



பெண் குழந்தை எதிர்பார்ப்புடன்

குறுக்கு நெடுக்காக

நெட்டிமுறித்து நடக்கிறான்

கதாநாயகன்.

ஆண் குழந்தை

பெற்று விடுகிறாள்

கதாநாயகி.



இக்காட்சிகளுக்கு எல்லாம்

அடுத்ததாக வரும்

ஊடல் கலந்த

செல்லச் சண்டைகளுடன்

சமாதானக் காட்சிகளை

நெற்றியில் கைவைத்து

சப்புகொட்டி

அரைத்த மாவென்றும்

குண்டுச்சட்டிக் குதிரையென்றும்

விமர்சனம் செய்வேன்



இவையெல்லாம்

எனக்கும்

நடக்காதவரை.



- ஞானசேகர்

Popularity: 2%



தாழ்வு மண்டலம்

Posted by J.S.ஞானசேகர் as Uncategorized


குடை

புறமுதுகிட்டது

புயல் சின்னம்.



24, 48, 72, 96 என

பெருக்கற்பலன்கள் பரிட்சயமாயின

புயல் சின்னம்.



குட்டைப் பாவாடை

ஜீன்ஸாகியது

புயல் சின்னம்.



வெண் குட்டைக் குடைக்குள்

இருவரின் உமிழ்நீர் ஆட்சி

புயல் சின்னம்.



இன்னும் பல எழுத நினைத்த

கவிதைத்தாள் பறந்தது

புயல் சின்னம்.



- ஞானசேகர்

Popularity: 2%



ஹோமோசெப்பியன்ஸ்

Posted by J.S.ஞானசேகர் as Uncategorized


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை.

- திருவள்ளுவர்



இனி

மிருகநேயம் என்றொரு

வார்த்தை தேவைப்படலாம்

- பிரேம்குமார்




(வழக்கம்போல் ஒருதேதி - ஓர் இடம்- பெயரில்லாத ஒரு பெண் கதாபாத்திரம் - இவற்றுடன் இன்னொரு கதை. அர்த்தத்தையே மாற்றிவிடும் அளவிற்கு எழுத்துப்பிழைகள் எதுவும் இக்கதையில் இல்லை)



இன்னக்கி தைமாசம் ரெண்டாந் தேதி. மாட்டுப் பொங்க. எனக்கு தெரிஞ்சி மாட்டுப்பொங்க அன்னக்கெ மாட்டுவேடிக்க நடக்குறது சோசன் அண்ணனோட அக்கா ஊர்ல மட்டுந்தான். வருசக்கடேசில மாசிபோயி பங்குனிமாசம் மாடுவுட்ற ஊரெல்லாங்கூட இருக்கு. ஆனா மொத நாளே மாட்டுவேடிக்கை பாக்குறதுங்குறது ஒரு தனிசொகங்க. மாட்டுவேடிக்கங்கறது உசுருல கலந்துபோயிட்ட ஒண்ணு. பொங்கலுக்கு ரிலீஸான ரஜினிபடமானாலும் சரி, செத்துப்போன ஊர்ப்பெருசானாலும் சரி, வயசுக்குவந்த மொறப்பொண்ணானாலும் - எல்லாம் தை மூணாந்தேதிதான். மாட்டுவேடிக்க டிவியில பாக்குறவங்களுக்கு அது ஒரு கொடுரமாத்தான் தெரியும். எனக்கும் மொத ரெண்டு வருசம் பாக்குறப்ப அதே நெனப்புதான். அப்பறம் பழகிடுச்சி.



மார்கழி மாசமே மாட்டுவேடிக்க நடக்கப்போறதுக்கு ஒத்திக பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. நாயித்துகெழம நாயித்துக்கெழம ஒரு அரமணிநேரத்துக்குச் சும்மா சாத்ரப்புக்கு ஒரு ரெண்டு மாட்ட விட்டு எறிப் பாப்பாக. பொதுவா மாடு ஓட்டிக்கிட்டு வர்ற ஆளு, தொணையாளு ரெண்டு பேத்தோடத்தான் வருவாப்புள்ள. மால, கயிறு, கொம்பு ஜோடன, பெயிண்ட்டு, கலருபொடி இவ்வளவுதான் மாட்டுக்குன்னு செலவு ஆகும். ஆனா தொணையாளுக்கு ஆகுற செலவுல இன்னொரு மாடே வாங்கிடலாம். காலச்சாப்பாடு, சாராயம், மத்தியானச் சாப்பாடு, கைக்காசு. இருந்தாலும் தலச்சம்புள்ள பெத்த தம்பதிக மாதிரி, நம்மாளு நம்பிக்கைய தளரவிடாம ஒவ்வொரு வருசமும் கூட்டணியத் தொடருவாப்புள்ள.



எல்லா வருசமும், சோசன் வீட்டுக்குப் போயி வண்டியில அவரக் கூட்டிக்கிட்டுத்தான் வேடிக்க பாக்கப் போறது. சோசனோட போகலன்னா எங்க வீட்டுல விட மாட்டாக. தொணயாளு இல்லன்னா சோசன அவரு பொண்டாட்டி விடாது. ஆமாங்க, சோசன் கல்யாணம் ஆனவரு. அவருல பாதி வயசுதான் எனக்கு. ஓடிக்கிட்டு இருந்த ஒராளுதண்டி பாம்பு வாலப் புடிச்சி, வரப்புல அடிச்செ கொன்னாரு. அதுல இருந்து சோசன் என்ற அர்ச்சுனனுக்கு, சேகர் என்ற கிருஷ்ணன் தான் தைமாசம் ரெண்டாம் தேதியன்னக்கி டிரைவரு.நான் வார் டவுசரு போட்டுருந்த காலத்துல, சோசன் அண்ணனும் ஒரு மொரட்டு பாச்சமாடு வச்சுருந்தாரு. அந்த மாட்டுக்குச் சினிமா சான்ஸெல்லாம் வந்துச்சு. சேரன் பாண்டியன் படத்துக்குத்தான். மாட்டக் கொல்லுற சீனமட்டும் எடுக்காத, என் மாடு கண்டிஷனா நடிக்குமுன்னு ஒரே பேச்சா சொல்லிடாரு. அப்புடி வளத்த மாட்ட, வெவசாயமுல்லாம் பாக்கமாட்டேன்னுட்டு சிங்கப்பூரு போறதுக்கு அந்தக்காலத்துலேயே 5 ரூவாக்கி வித்துட்டாரு. போன ஆறே மாசத்துல, ஏஜெண்டு பண்ணுல பிராடுல, சிங்கப்பூரு கவர்மண்டு சோசனோட சேத்து பத்துபேத்த திருப்பி அனுப்பிருச்சு.



சோசன் வீட்ல இல்ல. அந்த அக்கா, எனக்கு டீ போட்டு கொடுத்தாங்க. மாட்டுமடி, அடுப்படி, ஏன் வயிறு இப்புடி எங்கையும் தண்ணியத் தொடாம பாலு பாழ போச்சு. மாட்டுக்காரா ஆளும், தொணையாளுகளும் தண்ணிப்போடுல இன்னக்கிப் பண்ணப்போற கூத்த நெனச்சி சிரிச்சிக்கிட்டு இருந்தேன். நேரந்தான் போகுது சோசனக் காணாம். கீழத்தெரு தம்பிராசோட பசுமாடு ஒண்ணு செனையா இருக்காம். குட்டி தல பொறண்டு வலியில துடிக்கிதுன்னு வெள்ளனா விடியக்காலையில போனவரு இன்னும் வல்லையாம். வண்டிய எடுத்துக்கிட்டு தம்பிராசு வீட்டுக்கே போயிட்டேன்.



மாடு தரையில படுத்து இருக்கு. வாயிக்குள்ள சோசன் கையி. பின்னங்காலு ரெண்டும் தம்பிராசு கையி. முன்னங்காலு ரெண்டும் இன்னொரு ஆளு கை. இருங்க இருங்க. கொஞ்சம் இருங்க. அந்த மாட்டோட கண்ண நீங்க பாக்ககலல்ல. கொஞ்சம் இருங்க. சோசன் மாட்டோட கழுத்த, என்ன புடிக்க சொல்றாரு.



(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)



எல்லா ஊருலயும் பொறக்குற வழியும், பொறுக்குற வலியும் ஒண்ணுதாங்க. பாஷ மாறலாம்; படைப்பாளி மாறலாம்; ஜீவராசி மாறலாம்; காயீனப் பெத்த பொண்ணுல இருந்து, வருசப்பொறப்புக்கு டைம் வெச்சு பெத்துக்குற பொண்ணுவரைக்கும் வலிங்கிறது ஒண்ணுதான். கள்ளிக்காட்டு இதிகாசத்துல வைரமுத்து சொல்லாததையா நான் புதுசா சொல்லப் போறேன். வேடிக்கலுக்கு நேரமாச்சு.



“சோசா, ஒனக்கு வேற தனியா சொல்லணுமா? வேடிக்கலுக்கு நேரமாச்சுயா. ரொம்ப சாப்புடாதையா, அப்பறம் மத்தியானம் கரிச்சோறு எறங்காது”.

மாட்டு வேடிக்கலுக்குப் போற புருஷனுக்கு பொண்டாட்டி, சொல்ற அதே பாரம்பரிய டயலாக்க இந்த அக்கா வருசாவருசம் ஒலிபரப்பிறும். ஒரு பிரசவத்தின் காரணமாக அவ்வொலிபரப்பு இரண்டு மணிநேரங்கள் தாமதமாகியது. என்னைத்தவிர வேறு யாரும் தடங்கலுக்கு வருந்தியதாகத் தெரியவில்லை.

“அந்தச் சட்டய வெய்ங்க. நேத்துதான் தொவச்சேன். வேடிக்க முடிஞ்சோடன நேரா பொழுது சாயிறதுக்குள்ள வீடுவந்து சேந்துடுங்க. சேகரு, ஒன்ன நம்பிதான் அனுப்புறேன். மந்தைக்குள்ள போகாதீக. கண்டது கடையத தின்னு வயித்த கெடுத்துக்காதீக”. ஒவ்வொரு பித்தானுக்கும் ஒரு அட்வைஸ்.

“யக்கா, நாங்க என்ன சின்னபுள்ளயா. சீக்கரம் அனுப்புக்கா”

“இவரு பையில பத்தாயரம் ரூவா வெச்சுருக்காரு. இவரு அக்கா வீடு போன ஒடன, அவங்ககிட்ட அத மறந்துடாம கொடுக்கச் சொல்லு”

“யோவ், ஏன்யா கும்பல்ல பணமெல்லாம் எடுத்துக்கிட்டு?”

“விட்றா சேகரு. இவ சொன்னா கேக்க மாட்டா”



ஒருவழியா கெழம்பியாச்சு. இப்புடி நாங்க போன ஒடனயே, பதுனோரு மணி பஸ்ஸீக்குப் பொம்பள ஆளுகளோட சோசன் பொண்டாட்டியும் வந்துடும். அதே நெனப்புலதான், நானும் ஒண்ணும் சொல்லிக்காம போனேன். ஆனா,….



ஆனா,”யோவ், வண்டிய ஏன்யா அடப்பங்கொளத்துக்குள்ள விட்ற. சாராயமா? கிழிஞ்சது. கீழு கீழப்பா கீழ விட்டு ராயப்பாங்குற கதயா, இன்னிக்கி வேடிக்க பாத்தது மாதிரிதான்”. கர்ணனப் பாடினவங்களும், அடப்பங்கொளத்துக்குக்குள்ள போனவங்களும் வெறுங்கையா திரும்பினதுல்ல. சோசனும் அதுக்குத் தப்பல. இந்த வருசம் கொஞ்ச அதிகந்தான். ஆலமரத்திடில ஒக்காந்து, ஒரே மடக்குல எல்லாத்துலயும் முடிச்சுட்டாரு.

“ஒரு பொண்டாட்டி எப்ப வீட்டுக்குத் தூரமுன்னு தெரியாதவன் ஒரு புருசனா? சின்னப் பையனா இருந்தாலும், நீயே ஞாயம் சொல்லுடா சேகரு”

ஏதோ ஒரு விபரீதத்த அடப்பங்கொளத்து வெடிச்ச சகதில வெதக்கிறது புரிஞ்சது. சில நேரங்கள்ல உண்மையான சாட்சிகள மறக்கிறதே உத்தமுன்னு, செல்லாத சாட்சிகள்ன்னு ஊருக்கே கத சொன்னவன் நானு. வாயத் தொறப்பனா? மூச்.



“வேடிக்கலுக்கு வரமாட்டாளாம். கேட்டா வீட்டுக்குத் தூரமாம். எங்க அக்கா மூஞ்சில முழிக்க மாட்டாளாம்; நானும் முழிக்கக்கூடாதாம். நேத்து வந்தவடா இவ. எச்சிப்பாலு சொந்தத்தப் பிரிக்கிறதுக்கு இவ யாருடா?”

சோசனுக்குத் தலகாலு தெரியல. எனக்குத் தலகாலு புரியல. ஊசிப்போன கடலைய விரும்பிச் சாப்டேன்.

“சொல்றா சேகரு? பொண்டாட்டி எப்ப வீட்டுக்குத் தூரமுன்னு தெரியாதவன் ஒரு புருசனா”

தப்பிக்க வழி கெடச்ச மாதிரி, அந்த வழியா வேடிக்க மாட்ட ஓட்டிக்கிட்டு போயிக்கிட்டு இருந்த, சின்னதம்பியப் பார்த்து கத்தினேன்.

“என்னண்ணெ, இந்த வருஷம் எவ்ளொ பந்தயம்?”

“ஐனூறு ரூவா. கொம்புல முடிஞ்சிருக்கேன். எந்தக் கொம்பன் எடுக்குறான்னு பாப்போம்”

“பாப்போம்டா கெம்புளி”. சோசன் ஏந்திருச்சாச்சு. வண்டிய ஒர்ர்ரே தட்டு, சோசன் அக்கா வீட்டு வாசப்படில தட்டிக்கி முன்னாடிதான் நிப்பாட்டுனேன். நாலு வயசு பேரன் தட்டியத் தொறந்தான். கறிக்கொளம்பு வாசனை, தட்டிய திரும்ப சாத்திடுச்சு. வண்டிய வீட்டு ஓரத்துல வழக்கம்போல நிப்பாட்டிட்டு, திரும்பிப் பாத்தா, சோசன் இன்னும் வெளியவே நின்னுக்குட்டு இருக்காரு. சோசனுக்கு நேராத்தான், அவரு அக்கா குடும்பம் முழுசுமே பொணய ஓட்டிக்கிட்டு இருந்துச்சு. யாரும் சோசனக் கண்டுக்கல. செல சொந்தக்காரங்க, சோசன போயி கூப்புட்டாக. அவரு அசஞ்ச பாடில்ல. செல மாதிரி நிக்கிறாரு.



(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)



தரயெல்லாம் சோதன போடுறவ மாதிரி, மண்ணப் பாத்துக்கிட்டே சோசனுக்கிட்ட போனா அக்கா. தட்டியத் தொறந்தா.

“உள்ள வா சோசா”

“நான் வர்றது இருக்கட்டுங்க்கா. நீங்க கேட்ட பணத்தக் கொண்டாந்து இருக்கேன். ஏன் மாட்டக் குடுத்துடுங்க. பாத்து ரெண்டு நாளாச்சு”

“மொதல்ல உள்ள வா. திருவிழா கூட்டமுல்லாம் ரோட்டுல வரப்போக இருக்கு. சாப்டுட்டு பொறுமையாப் பேசுவோம்”

“வாயில்லா சீவன….”

“என்னா சோசப்பு. வம்புழுக்க வந்துருக்கியா?” இதுதாங்க அக்கா புருசன் - சோசன் மாமா. பொணய ஓட்டிக்கிட்டு இருந்தவரு, சட்டுனு மாட்ட விட்டுட்டு, சோசனப் பாத்தாரு. அவரு பையன், மாட்டுக்கயிறு தரையில விழுறதுக்குள்ள, அதப் புடிச்சு பொணயலத் தொடந்து ஓட்டுனாரு.கண்ணசைவுக்கு வேல பாக்குறது ரெண்டு ஆம்பள சிங்கக்குட்டிகளப் பெத்து இருக்குறதுனால, எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு சல்லிவேரு இவருதான். ஒரு பொம்பள சிங்கக்குட்டியும் இருக்கு. அதுக்குக் கல்யாணமாயி, ஒரு சிங்கக்குட்டி முக்கா தயாரிப்புல இருக்கு.



“சோசா…” மருதூரு பெருசு ஞாயம் சொல்ல

த ருச்சுச்சு.

ள் தி

ளா ந்

டி ஏ

ச்சே. என்ன மட்டமான சரக்குய்யா இது? வாய் இந்த நாத்தம் நாறுது.

“சோசா, மாமாவும் அக்காவும் எல்லா விசயத்தையும் ஏற்கனவே எனக்கிட்ட சொல்லிட்டாக. நல்ல நாளும் பெரிய நாளுமா, அதப்பத்தி இப்பப் பேச வேணாம். வேடிக்க முடியட்டும். ரெண்டு பெரிய மனுசங்கள வெச்சு ஞாயம் பேசுவோம்”

“இந்த ஆளுக்கிட்ட என்ன மாமா ஞாயம் பேச வேண்டி இருக்கு”

“இந்த ஆளு”. இந்த வார்த்தக்கிப் பலவெதமான பின்விளைவுகள். அக்கா மண்பரிசோதனையை விட்டுவிட்டு, சோசனைப் பார்த்தாள். நல்லவேள! அவளுக்கும் ரெண்டு கண்ணுதான். நெத்தில பொட்டுமட்டும்தான் இருந்துச்சு. அக்காவிட்ட வேலைய மாமா தொடர்ந்தார். வேறென்ன? மண்பரிசோதனை. பொணய ஓட்டுற மகன், ஒரு மாட்டை ஓங்கி அடித்தான். இன்னொரு மகன் எழுந்திரிக்கையில், கட்டில் கம்பியில் மாட்டி, கைலி கிழிந்தது. பாம்ப்புக்கறி திங்கிற ஊர்ல வாக்கப்பட்டா, நடுமுண்டம் எனக்குத்தான்னு எனக்கு லேச ஒறக்க ஆரம்பிச்சிச்சு. தட்டிக்கி வெளில வண்டியோட வந்தேன். சோசனுக்குப் பின்னாடி, லேசா அவரப் புடிச்சிக்கிட்டு நின்னேன்.



“சோசா, ஓன் பக்கமே ஞாயம் இருக்குறதா வெச்சுக்குவோம். பொண்ணக் குடுத்துருக்கியல்ல? நீதான் பணிஞ்சு போகனும்” மருதூரு பெருசு.

“எத்தன வருசம் மாமா பணிஞ்சு போறது? பொண்ணக் கட்டி குடுத்துருக்கோம்; தாய்மாமன் இல்லாத எனக்கு தாய்மாமன் மொற எடுத்து சீரெல்லாம் செஞ்சாரு. அதுக்காக எத்தனநாளுதான் பணிஞ்சு போறது?”

சோசன் தோளப் புடிச்சு சட்டென ஏன் பக்கம் திருப்புனேன். யாருக்குமே அடங்காத மாடு, தொத்த எசமானுக்கு மடங்குற மாதிரி, சோசனுக்கு ஒறக்கிற மாதிரி எனக்குப் பேசத் தெரியும். சோசனத் தனியாக் கூட்டிக்கிட்டுபோய் அமைதிப்படுத்துனேன். என்ன சொன்னேன்னு எல்லாம் கேக்காதீங்க?



“சரி மருதூரு மாமா. நல்ல நாளும் பெரிய நாளுமா, ஞாயம் பேச வேண்டாம். வேடிக்க முடிஞ்ச கையோட, இதெ எடத்துல பஞ்சாயம் பண்ணாம நான் போறதில்ல”

“நானே பண்ணி வெக்கிறேன்யா. இந்தாம்மா, ரெண்டு தம்பிக்கும் எல போடு”

“நீங்க இதுல தலயிட வேண்டாம் மாமா. சொந்தங்கெறதே சொதப்பல்ன்னு ஏன் ஒடன்பெறப்பு எனக்கு கத்துக் கொடுத்துருச்சு. இதெ ஊர்ல இருந்து, ஒடயாத்தெருல ஒரு பெரிய மனுசன், வெள்ளாளத்தெருல ஒரு பெரிய மனுசன், குடியானத்தெருவுல ஒரு பெரிய மனுசன் நீங்களே கூட்டிக்கிட்டு வாங்க. ஞாயம் பேசுவோம்”.



சோசன் சொன்னதுக்கு யாருமே சரின்னு சொல்லல. ஆனா, அதுதான் முடிவுன்னு நாங்க ரெண்டு பேரும் வண்டிய எடுத்துக்கிட்டு, மந்தக்கிப் போய்ட்டோம். ரெண்டு மணிக்கு மொத தொழு தொறக்குறது. ஒரு மணிக்கெல்லாம் சனங்களும், போலீஸும், ஐஸ்காரனும் கூட ஆரம்பிச்சாச்சு. வண்டிய ஏதோ ஒரு வீட்டு வாசப்படில நிப்பாட்டிட்டு, மந்தைக் கடலில் இரு மழைத்துளிகள் கலந்தன. அதுல ஒண்ணு அமிலமழை.



(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)



நாங்க ரெண்டுபேரும் வேடிக்கலுக்குன்னே தனிசட்டயும், கைலியும் வெச்சிருப்போம். அந்த ஒருநாள் மட்டும்தான் அதப் போடுறது. தொழு தொறக்குறதுக்கு, அரமணி நேரத்துக்கு முன்னாடியே, மொத தொழுவோட வாசல்ல மொத ஆளா நிப்போம். அடப்பாவிகளா, அவுத்துவிட்ட மாடு, மொதல்ல ஒங்களத் தாண்டித்தானே போகணும். குத்திக்கித்தித் தொலக்காது? இப்படியெல்லாம் எங்களப் பாக்குறவங்க பயப்படலாம். எங்களுக்குப் பயங்கெடையாது. வளத்தியான வாத்தியாரு வகுப்புல மொத பெஞ்சு பய தூங்குறது மாதிரி, வெளில வர்ற மாடு தொணையாளுக தொந்தரவுல இருந்து தப்பிசோம்டான்னு நேராத்தான் ஓடும். அப்புடி போற எல்லா மாட்டயும் தொட்டுப் பாக்குறது. செல சமயம் மாடு எங்கள நெருங்குனா, தென்னாப்பிரிக்காவுல குதிரங்களுக்குக் காந்தி செஞ்ச அதெ டெக்னிக்குதான்; கீழ படுத்துக்க வேண்டியது. இதுமாதிரி பல விஷயம் இருக்குதுங்க. ஜீவரசிகளுக்குப் பயந்துபோய், வீட்டுல அடஞ்சு கெடக்காம, மந்தையில வந்து நின்னுபாத்தா, காலா ஏன் கவட்டிக்கிக் கீழ வாடா, இப்புடி தைரியமா சொல்லலாம். இதத்தவர எங்க எங்க தாவணி போட்ட தீபாவளி நிக்கிதுன்னு பாத்து வெச்சுக்கிறது. ஒவ்வொரு மாட்டையும் தட்டிவிட்டுட்டு, ஒரு சிரிப்பு சிரிக்கிறது. தொழு மாறுரப்ப, துண்ட உருவி தலக்கிமேல சுத்துறது. தீபாவளி ஐஸ் வாங்குனா, நாங்களும் வாங்குறது. வேணும்னே மைக்குகாரங்கிட்ட போயி, பத்துரூவா குடுத்து, ராமராஜன் ரசிகர் மன்றமுன்னு சொல்லச் சொல்றது.



இது எதுவுமே இந்த வருசம் நாங்க பண்ணல. மடியில கணம், வழியில பயம். 10000 ரூவா. ரெண்டு மணில இருந்து, அஞ்சு மணிவர ஒரு கோயிலு கோபுரத்து சாமிமேல ஒக்காந்துகிட்டு, மாடு பாத்தோம். மந்தக்குள்ள நின்ன குடிகாரப் புருசன, ஒரு பொம்பள அடிச்சு இழுத்து வந்துச்சு. மந்தைக்குள் ஒரு பெண் என நாங்கள் வெட்கப்பட்டோம். போன வருசம் கைலியோட மாடு புடிச்சவன் ஒருத்தன், புதுப் பொண்டாட்டியோட கொடக்கிக் கீழ பஞ்சாயத்து ஆபீஸ் மொட்ட மாடில நின்னான். அடக்கியவன் அடக்கப்பட்டான் என நாங்கள் சிரித்தோம். ஒருவருக்கு மாடு முட்டி, குடல் சரிந்தது. நாங்கள் வருத்தப்பட்டோம். மூன்று யுகங்கள் சோகமாக முடிந்தன.



சோசன் அக்கா வீட்டுக்குத் திருப்புனோம். கட்டில்ல நாலஞ்சு கெழடுக. ரெண்டு காப்பி சாப்புட்டுச்சு. ரெண்டு எற்கனவே சரக்கு சாப்புட்ட சாயல். யாரும் சோசனை வாயால் அழைக்கவில்லை. மண்ணப் பாத்துக்கிட்டே கைகூப்பினார்கள். சோசனும். பஞ்சாயத்து ஆரம்பமானது. சோசப் என்ற மீசை வைத்த ஆண், சேகர் என்ற மீசை வழித்த ஆண். மற்ற எல்லா ஆண்களுக்கும் அமர இருக்கை இருந்தது. என்ன பிரச்சனை என்று எனக்குப் புடிபடவே இல்ல. ஆனா சோசனுக்கு யாருமே ஞாயம் பேசவில்லை என்று மட்டும் புரிந்தது. ஒரு பாக்யராஜ் படத்தில் வருவதுபோல், முடிவு எடுக்கப்பட்ட ஒரு விவாதம் அது. பஞ்சாயம் புரியாததாலா, அங்கிட்டும் இங்கிட்டும் பிராக்கு பாத்துக்கிட்டு இருந்தேன். சண்டைக்கு நடுவே, போதிமரம்போல ஓர் அழகான காட்சி கண்ணில் பட்டது. அழகான தமிழிலேயே சொல்கிறேன்.



சோசப்பின் அக்காவின் மூத்த பையனுக்கு இரண்டு பிள்ளைகள்; இளையவனுக்கு ஒன்று. மூன்றும் மாடிப்படியின் கடைசி படிக்கட்டில் நின்றுகொண்டிருந்தன. கீழ் படிக்கட்டில் அமர்ந்துகொண்டு அக்காபேரப்பிள்ளைகளையும், பஞ்சாயத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மூத்தவனின் மூத்த மகனை, இளையவனின் மகன் மாடிப் படிகளில் தள்ளிவிட்டான். யார் தள்ளியது என்று நான்கு பேருக்குத்தான் தெரியும். எனக்கு, சோசப்பின் அக்காவுக்கு, மற்ற இரண்டு குழந்தைகளுக்கு. என்னாச்சு என்று சில மைக்ரோ வினாடிகள் வித்தியாசத்தில் வெவ்வேறு வாய்களில் இருந்து வார்த்தை வந்து, பிறகு பஞ்சாயத்து தொடர்ந்தது. மூத்த மருமகள் யார் தள்ளியதென்று விசாரித்தாள். சோசப்பின் அக்கா, மூத்தவனின் இரண்டாவது மகனென்று சொன்னாள். எனக்குத் தூக்குவாரி போட்டது. அக்குழந்தை எவ்வளவோ மறுத்தும், அடி தவிர்க்கப்படவில்லை.





இவ்வளவு நேரம் அமைதியாகவும், பித்துக்குளி போல சிரித்துக்கொண்டும் இருந்த சேகர் நேராய் சோசப்பின் அக்காவிடம் சென்றேன். அவளுக்கு மட்டும் கேட்கும்படி, “சின்னப்புள்ளகிட்ட ஓரவஞ்சன காட்டுறியே, என்ன மாதிரி பொம்பள நீ? ச்ச்சீ” வந்துவிட்டேன். அவள் என்னிடம் வந்து தண்ணீர் கொடுப்பதுபோல் சொன்னாள், “புருசனும் தம்பியும் அடிச்சிக்கையில நான் அமைதியா இருக்கேன். இதே மாதிரி நான் அமைதியா இருந்திருந்தா நாளக்கி ஏன் மகனுங்க ரெண்டுபேரும் அடிச்சிக்க இந்தமாடிப்படியே காரணமா இருக்கலாம்”. தனது தவறுகளுக்கும், ஒருசார்புக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் மனிதன் கொடுக்கும் நியாயத்தீர்ப்பு மற்றவர்களுக்குச் சுறுக் என்றால், அந்த மற்றவர்களும் அவன் சார்பு. இந்நிகழ்வை இப்படி மறுப்பதா? இல்லை, ஒரு பெண்ணின் பிறந்த வீடு - புகுந்த வீடு இருதலைக்கொள்ளி எறும்பு வாழ்க்கை என்று ஏற்பதா? சீரணிப்பதற்குள், வீட்டுக்குத் தூரமுன்னு சொன்ன சோசப்பின் மனைவி வந்துவிட்டாள்.



அவள் யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை,

“வேடிக்கலுக்குப் போன மனுசன் இருட்டியும் வீடு வல்லான்னா, ஒண்டியா இருக்குற பொம்பள என்னய்யா நெனப்பா?”

“நீ எதுக்கு வந்த? நம்ம மாட்டத்தான் திரும்பக் கேட்டுக்கிட்டு இருக்கேன்”

“என்ன பேச்சு வேண்டிக்கெடக்குது. பத்தாயர ரூவாய மூஞ்சில வீசிட்டு மாட்ட மகாராசன் மாதிரி ஓட்டிக்கிட்டு வரவேண்டியதுதானே?”

“இந்தாம்மா, சபைக்கி மரியாத குடு” மருதூரு பெருசு.

“நீயெல்லாம் பெரிய மனுசங்களாய்யா? ஒங்களுக்கு எல்லாம் மகளுக இருக்கா இல்லையா?”

த்தூ என்று துப்பினாள். சோசனின் மாமாவுக்கு ஒரு ஸ்பெஷல் துப்பு. சோசனின் மாமா என்ற பெரிய மனுசனுக்கும், 10000 ரூவாய்க்குமான கதையை அவள் சொன்னாள். அப்படியே அவள் சொன்னால் குழப்பும். நான் சொல்கிறேன்.



(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)



ஒரு அஞ்சாறு தலமொறைக்கி முன்னாடி ரெண்டு குடும்பம் குடியேறி, இன்னக்கி ஒரு பத்து தலக்கட்டு இருக்குற ஊருதான் சோசன் ஊரு. அந்த ஊருல பொறந்த கொழந்தங்க எல்லாத்துக்கும், தாய் தகப்பன் வயல்ல எறங்கி வெள்ளாம பாக்குறப்ப, தொட்டில்ல தூங்குறதுக்குத் தாய்மடியா இருக்குறது ஒரு மரம். குரும்ப மரம். அந்த சுத்துவட்டாரத்துல வேற எங்கயும் கெடையாது. சோசனோட கெணத்து மேட்டுல இருக்கு. அது நடவுநேரம். பக்கத்து வயக்காரங்காரங்க எல்லாம் கடல போட்டு இருந்ததால, மத்தியானச் சாப்பாட்டுக்கு வேற யாரும் குரும்ப மரத்தடியில கூடல. சோசனும் சோசன் பொண்டாட்டியும் மட்டும், ரெண்டு நாளக்கி முன்னாடி பாம்புகடிபட்ட ரஞ்சிதத்தப் பத்தி பேசிக்கிட்டு இருந்தாக.



“ரஞ்சிதம் புருசன ஆடுதின்னாபால ஒடிச்சிட்டு வரச்சொல்லி வைத்தியரு சொல்லி இருக்காரு. அந்தக் குடிகார முண்ட, ஆடுதின்னு மிச்சமிருக்குற பாலைன்னு போயி விசாரிச்சு இருக்கான்”

கருவாட்டு இடைவெளி.

“ஊரு பெருசு ஒண்ணு, தமிழே மறக்குற அளவுக்கு குடிச்சிருக்கான்னு அவனுக்கு வெளக்கம் ஒண்ணு சொன்னுச்சாம். அது ஆடுதின்னுன பாலை இல்ல. ஆடுதின்னாபாலை. அப்புடின்னா, ஆடு திங்காததுன்னு அர்த்தம்”

பழயசோறு இடைவெளி.

“கடைசியில வெறுங்கையோட வந்த அவனப்பாத்து, வைத்தியரு சொன்னாராம்: அட குடிக்காரக் குப்பா, ஆடு கடிச்சதுமில்ல; கடிக்காததுமில்ல. அது ஒரு தனி மூலிகடா. அப்புடின்னாராம்”

“அட சண்டாலா. பொண்டாட்டியக் கொல்லப்பாத்தான் பாருங்க”

“ரஞ்சிதம் வீடுதிரும்புறப்ப வைத்தியரு சொன்னாராம்: ஓம் புசனுக்கிட்ட ஒரு வேல தர்றதும், எலக்ட்ரிக்க நம்பி எல போட்றதும் ஒண்ணுதான். தெளிவா இருந்தாத்தான் உண்டு. இல்லன்னா, மைசூர் பாக்கு வாங்க, மைசூரே போயிருவாப்புள்ள”.

சோசன் மனைவிக்குப் பொறையேர்ற அளவுக்குச் சிரிப்பு. வயக்காட்டுத் தனிமையில், சோசனும் சேர்ந்து சிரிச்சாரு. தனிமை என்ற நிலைமை அவசரமாக விடைபெற்றுக் கொண்டது.

“குடுத்த காசத் திருப்பித் தரத் வக்கில்ல. என்ன சல்லாபம் வேண்டிக் கெடக்கு?” சோசனின் அக்கா புருசன்.

மாமா என்ற உறவிடம் இருந்து முதல்முறையாக கரடுமுரடான வார்த்தைகள், அறிமுகம்கூட இல்லாமல். இருவரும் நிதானமாக சுதாரித்தார்கள்.

“என்ன மாமா வந்ததும் வராததுமா காசுப்பத்தி பேசுறீங்க”

“தோள்ல தூக்கிவளத்த புள்ள நல்லா இருக்கட்டுமேன்னுதான், அன்னக்கி நீ சிங்கப்பூரு போகனும்னு கேட்ட ஒடனேயெ, 10000 ரூவா குடுத்தேன். அத வச்சி பொழக்கத் தெரியல. ஒன்ன எப்புடி நம்புறது?”

“மாமா, ஒங்களுக்கு அவசரமா பணம் தேவன்னா, இன்னும் ரெண்டு நாளக்குள்ள தந்துடுறேன்”

எதுவும் பேசாமல், தென்னமரத்தடியில் கட்டி இருந்த ரெண்டு ஒழவு மாடுகளைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்..

“பணத்தக் குடுத்துட்டு மாட்ட வாங்கிக்க”

“மாமா இது ஞாயம் இல்ல மாமா”

“எனக்கு ஞாயம் சொல்லித் தர்றியா?”

அதுக்கப்பறம் சோசன் பேசவில்லை. சோசனின் மனைவி பேச்சை நிறுத்தவில்லை.

“அப்பா அப்பா மாட்ட விட்டுருங்க. எங்க தலய வீட்ட வயல எதையாவது அடமானம் வெச்சு சாயந்தரத்துக்குள்ள …”

“ரெண்டு நாள்ல பொங்க வர்து தெரியுமுல்ல”

ஊரார் பார்க்கும் கோலம், உடையவன் பார்க்காத கோலத்தைச் சோசனின் மனைவி சோசனுக்குக் காட்டினாள். தங்கத்தாலியக் கலட்டி, சோசனின் மாமா காலடியில் வைத்தாள். சோசன் மனதால் செத்தார். ஊதாரி புருசனைவிட மாடே மேல்.



சைக்கிளின் பின்னால் மாடுகளைக் கட்டிக்கொண்டு 15 கிமீ தொலைவில் இருக்கும் தனது ஊருக்குச் சோசனின் மாமா, எதையும் கண்டுகொள்ளாமல் புறப்பட்டு போய்விட்டார். அடிக்கடி சோசன் வீட்டுக்கு வந்து பழக்கப்பட்ட ஆள் என்பதால், அடம்பிடிக்காமல் மாடுகளும் பின்சென்றன.



மதிய ஒழவு இல்லாம, பொழுது கருக்குற வரைக்கும், குரும்ப மரத்துக்குக் கீழ வழக்கம்போல அழுகை சத்தம். ஆனால், அந்த பிற்பகலில் மட்டும் அழுகைகளுக்குச் சொந்தமானவர்கள் குழந்தைகள் அல்